5 இலட்சம் அரச ஊழியர்களின் முடிவு..! முன்வைக்கப்படவுள்ள மனு

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் சம்பள அதிகரிப்பு சாத்தியமில்லை என்றால் இடைக்கால கொடுப்பனவை வழங்குமாறு அரச ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கமைய, சுமார் ஐந்து இலட்சம் அரச ஊழியர்கள் கையெழுத்திட்ட மனுவுடன் அரசிடம் கோரிக்கையொன்றினை முன்வைக்க அரசு ஊழியர் சங்கங்களின் ஒன்றியம் முடிவு செய்துள்ளது.

சம்பளம் போதுமானதாக இல்லை

 

5 இலட்சம் அரச ஊழியர்களின் முடிவு..! முன்வைக்கப்படவுள்ள மனு | Sri Lanka Government Employees Salaray Petition

நாட்டில் தற்போது பணவீக்கம் வேகமாக உயர்ந்துள்ளதுடன், பெறப்படும் சம்பளம் வாழ்க்கைச் செலவுக்கு போதுமானதாக இல்லை என அச்சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் அரசாங்கம் அதிக அக்கறை காட்டவில்லை என சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.