மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் -அமெரிக்க திறைசேரி அதிகாரி சந்திப்பு
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (25) விஜயம் செய்துள்ள அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத்துடன் இலங்கையின் சக்தி மற்றும் எரிசக்தி துறை தொடர்பான முக்கிய கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
ரொபேர்ட் கப்ரோத், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் அமெரிக்க திறைசேரி மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் ஏஜென்சி (USAID) ஆகியவற்றின் அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டதாக அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.
இலங்கையின் சக்தி மற்றும் ஆற்றல் துறையில் சீர்திருத்தங்கள், கொள்கைகள், கடன் மறுசீரமைப்பு, எரிபொருள் முகாமைத்துவ அமைப்பு மற்றும் பெற்றோலியப் பொருட்களை கொள்வனவு செய்தல் போன்றவற்றில் இந்தப் பேச்சுக்கள் கவனம் செலுத்தியதாக அவர் மேலும் கூறினார்.
கருத்துக்களேதுமில்லை