சிறிலங்கா அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட கடிதங்களை தீயிட்டுக் கொழுத்திய உறவுகள்!

அரசாங்கத்தின் காணாமல் போன ஆட்கள் தொடர்பான அலுவலகத்தால் அனுப்பப்பட்ட கடிதங்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தீக்கிரையாக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த போராட்டத்தில் வைத்தே இன்று அந்த கடிதங்கள் எரிக்கப்பட்டுள்ளன.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறகளுக்கு, அரசாங்கத்தின் காணாமல் போன ஆட்கள் தொடர்பான அலுவலகத்தால், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான மேலதிக விபரங்கள் கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் குறித்த அலுவலகத்தை தாம் நிராகரிப்பதாகவும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச தலையீட்டின் மூலமே காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கிடைக்கும் எனத் தெரிவித்து குறித்த கடிதத்தை கிழித்து அதனை தீக்கிரையாக்கினர்.

கடிதங்களை தீக்கிரையாக்கிய தாய்மார் ‘இன்னும் காலம் தாழ்த்தாது கையில் ஒப்படைத்த தமது பிள்ளைகளே தமக்கு வேண்டும்’ எனக் கோரி கண்ணீர் விட்டழுதனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.