சீன ஆதரவு வங்கி இலங்கைக்கு உதவிக்கரம்
சீனாவின் ஆதரவுடன் செயற்படும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) இலங்கை உட்பட கடுமையான கடன் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நாடுகளுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது.
இதன்படி, இலங்கைக்கு 100 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் ஜின் லிகுன் உறுதியளித்துள்ளார்.
நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதால் இலங்கைக்கு இந்த உதவி வழங்கப்படவுள்ளது.
நிச்சயமற்ற சகாப்தத்தில், நீடித்திருக்கும் தொற்றுநோய் மற்றும் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள், வரவிருக்கும் கொந்தளிப்பான உலகளாவிய பொருளாதார நிலைமைகளுக்கு இரையாகக்கூடிய நாடுகளுக்கு உதவ தாங்கள் தயாராக இருக்கிறோம் ஜின் லிகுன் கூறியுள்ளார்.
வளர்ந்து வரும் மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரம், சுற்றுச்சூழல், அநீதியின் மரபுகளை நிவர்த்தி செய்ய தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் கூறினார்.
கருத்துக்களேதுமில்லை