சிறிலங்காவின் கல்வி முறையில் மாற்றம்..! முன்னெடுக்கப்படவுள்ள விசேட செயற்திட்டம்!!

சிறிலங்காவின் கல்வி முறையை மாற்றுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வி முறையில் மாற்றம் தொடர்பான திருத்தங்களை 6 பகுதிகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கிறோம்.

 

கல்வி முறை திட்டங்கள்

சிறிலங்காவின் கல்வி முறையில் மாற்றம்..! முன்னெடுக்கப்படவுள்ள விசேட செயற்திட்டம் | School Education System Change Sri Lanka Schools

கல்வி சீர்திருத்தத்தை முன்னெடுப்பதை விட, இன்று நாம் மாற்றத்திற்கு செல்ல வேண்டும்.

அந்த வகையில் கல்வி முறை மாற்றத்தை 6 பாகங்களாக திட்டமிட்டுள்ளோம். அதை முதலில் தொடங்க உள்ளோம்.

எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் நிர்வாகத்தில் கல்வி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில், நாம் திறனை வளர்த்துக் கொள்ள முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.