கடுமையான பொருளாதார நெருக்கடி..! மகிந்த விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
கடுமையான பொருளாதார அழுத்தத்திற்கு உள்ளான மக்கள் மீது அதிக வரிகளை சுமத்த வேண்டாம் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் மீது வரி அல்லது கட்டணச் சுமைகளை சுமத்துவதனை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்கள் மீது எத்தனை புதிய வரிகள் விதிக்கப்பட்டாலும் அவற்றை வசூலிப்பது இலகுவானதல்ல என தெரிவித்த முன்னாள் அதிபர், இவ்வாறான பிரேரணையை அரசியல் ரீதியாக ஆதரிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வரி அல்லது கட்டணச் சுமைகள்
நாட்டின் உற்பத்தி செயல்முறையை ஊக்குவிப்பதன் மூலம் வருமானத்தை அதிகரிக்காமல் என அவர் கூறியுள்ளார்.
அதிக வரிகளையோ கட்டணங்களையோ மக்கள் மீது சுமத்துவது நடைமுறைச் செயல் அல்ல என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை