இலங்கையில் நாளை முதல் அதிகரிக்கும் கட்டணங்கள்! வெளியான முழுமையான தகவல்
ஆட்பதிவுத் திணைக்களத்தின் சில சேவை கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.
நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்தக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.
தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் இவ்வாறு அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டணங்கள்
இலங்கையில் நாளை முதல் அதிகரிக்கும் கட்டணங்கள்! வெளியான முழுமையான தகவல் | Nic Fees Will Increase From Tomorrow Sri Lanka
அமைச்சரவையின் அனுமதியுடன் இந்த கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இதற்கமைய, முதல் தடவையாக தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க 200 ரூபா, காலாவதியான தேசிய அடையாள அட்டையை புதுப்பிக்க விண்ணப்பிப்பதற்கு 200 ரூபா, தொலைந்துபோன தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள விண்ணப்பிப்பதற்கு 1000 ரூபா.
தேசிய அடையாள அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ள விண்ணப்பிப்பதற்கு 500 ரூபா, ஒரு நாள் சேவையினூடாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள (விண்ணப்ப கட்டணமின்றி) 2000 ரூபா, தேசிய அடையாள அட்டையை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்துக்கொள்ள 2000 ரூபா, புகைப்பட நிலையங்களில் பதிவு செய்வதற்கு 15000 ரூபாய். புகைப்படத்தினை பதிவு செய்யும் பணியை புதுப்பித்தல் (இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை) 3000 ரூபா என்ற அளவில் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை