கௌரி சங்கரி தவராசா நினைவாக புங்குடுதீவில் மரநடுகை .

சிரேஷ்ட சட்டத்தரணி அமரர் கௌரிசங்கரி தவராசா அவர்களின் முதலாவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) ஏற்பாட்டில் புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை வித்தியாலயத்தின் முன்பாக நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்களுக்கு 100 நெல்லிமரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டதோடு புங்குடுதீவில் 10 பயன்தரு மரக்கன்றுகள் நடுகைசெய்யப்பட்டன .

இந்நிகழ்வில் சூழகம் அமைப்பின் போசகர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா , சூழகம் அமைப்பின் இணைப்பாளர் கருணாகரன் குணாளன் , எழுத்தாளர் முஸ்டின் இஸ்மாயில் , வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் , சட்டத்தரணி தர்சிகா , கிறீன் லேயர் மரநடுகை அமைப்பின் இணைப்பாளர் பாக்கியநாதன் சசிகுமார் , சமூக ஆர்வலர் ஆகாஷ் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதற்கான நிதியுதவியை சூழகம் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் ந. சிவானந்தன் மற்றும் ஆனந்தி சுரேஷ் ஆகியோர் வழங்கியிருந்தனர் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.