அச்சுவேலியில் கூடிய மழைவீழ்ச்சியாக 56.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது..

(30.10.2022) காலை-8.30 மணி முதல் இன்று திங்கட்கிழமை(31.10.2022) காலை-8.30 மணி வரையான 24 மணி நேரத்தில் யாழ்.மாவட்ட மழைவீழ்ச்சி நிலவரப்படி அச்சுவேலியில் கூடிய மழைவீழ்ச்சியாக 56.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளதாகத் திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார்.
குறித்த காலப் பகுதியில் வடமராட்சி அம்பனில் 53.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், நெடுந்தீவில் 38.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், யாழ்.நகரப் பகுதியில் 37.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், திருநெல்வேலியில் 35.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், யாழ்.கோட்டையில் 27.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், பருத்தித்துறையில் 27.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், சாவகச்சேரியில் 27.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், தெல்லிப்பழையில் 25.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகி உள்ளன எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.