கடந்த மாதம் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்

ஒக்டோபர் மாதத்தில் 42,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 568,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

 

 

சுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ள இலங்கை, 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் குறைந்தது ஒரு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என நம்புவதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

எதிர்பார்க்கப்படும் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தால், அரசாங்கத்திற்கு 1.8 பில்லியன் டொலர் வருமானம் கிடைக்கும் என்றும் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.