ஜொலி போய்ஸ் விளையாட்டு கழகத்தினால் ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி மாணவர்களுக்கான சீருடை வழங்கி வைப்பு….
மாணவர்களுக்கான விளையாட்டு சீருடை வழங்கும் நிகழ்வானது அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் 02/11/2022 இன்று காலை 11.00 மணியளவில் பிரதி அதிபர் திரு.C.மதியழகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வானது பாடசாலையின் அதிபர் J.R. டேவிட் அமிர்தலிங்கம் அவர்களின் வழிகாட்டலுடன் இடம்பெற்றது.
மாணவர்களுக்கான விளையாட்டு சீருடைக்கான அனுசரணையினை ஆலையடி வேம்பு ஜொலி போய்ஸ் விளையாட்டு கழகம் வழங்கி இருந்தது. அதன் தலைவர் திரு.பி. புனிதராஜ் , மற்றும் முன்னாள் விளையாட்டுக்கழகத் தலைவர் திரு. சா. இன்பராஜா, முன்னாள் விளையாட்டு கழக செயலாளர் திரு. யோகானந்தன் மற்றும் பாடசாலையின் அபிவிருத்தி செயலாளர் திரு. எஸ். பி.அகிலன், விளையாட்டு ஆசிரியர்களான திருமதி. லக்சுமி திருச்செல்வம்,மொகமட் அஜ்மல், மொகமட் ஆசிக், S. A. C. M.றமின்,மேலும் பிரதி அதிபர்களான சுதர்சன், சர்மிளன் ஆகியோரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான விளையாட்டு சீருடையினை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை