பளையில் துப்பாக்கி மற்றும் வாளுடன் ஒருவர் கைது!
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகாவில் பகுதியில் நபர் ஒருவரின் வீட்டில் வாள் மற்றும்இடியன்துப்பாக்கி வைத்திருப்பதாக பளை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்றைய தினம் (01) மாலை குறித்த சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட போதே குறித்த துப்பாக்கி மற்றும் வாள் கைப்பற்றப்பட்டது.
கைதான சந்தேகநபர் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் முற்படுத்த உள்ளதாக பளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கருத்துக்களேதுமில்லை