யாழ்ப்பாணம், மட்டுவிலில் அமைக்கப்பட்டு இயங்காமலுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை அமைச்சர்கள் இன்று பார்வையிட்டனர்.

யாழ்ப்பாணம், மட்டுவிலில் அமைக்கப்பட்டு இயங்காமலுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.

சுமார் 200 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 20 வர்த்தக நிலையங்களை உள்ளடக்கியதாக இந்த வர்த்தக மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

அமைக்கப்பட்டுள்ள வியாபார மத்திய நிலையத்தை விவசாயிகளுக்கும், மக்களும் நன்மையளிக்கும் வகையில் வினைத் திறனாக செயற்படுத்துவது தொடர்பாக, மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள், விவசாய சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தகளின் பிரதிநிகள் ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர் இதன்போது ஆலோசனைகளை நடத்தினர்.

நல்லாட்சி அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை இவ்வருடம் மார்ச் மாதம் 20 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.