தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் -சபாநாயகர் சந்திப்பு
தென்னாபிரிக்காவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எட்வின் ஷார்க் கடந்த 28ஆம் திகதி பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவும் கலந்து கொண்டார்.
இரு நாடுகளின் நாடாளுமன்ற நட்புறவுச் சங்கங்களின் ஊடாக இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக பாராளுமன்ற தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை