மஹிந்த அரசியலில் இருந்து ஓய்வுபெறத் தயாராகிறார்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதனையடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணி தொடர்பில் கலந்துரையாடி வருவதாகவும் கூறப்படுகிறது.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய கூட்டணி எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும், இந்தத் தீர்மானத்திற்கு பொதுஜன பெரமுன பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இச்செய்தியை சிங்கள இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.