மீசாலை-அல்லாரை வீதியில் உள்ள மதவு உடைந்து விழும் ஆபத்து;விரைந்து புனரமைக்குமாறு கோரிக்கை.
தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட, வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான மீசாலை-அல்லாரை வீதியில் உள்ள மதவு இடிந்து விழும் அபாய நிலையில் காணப்படுவதனால் அதனை உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் பிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சாவகச்சேரி நகரசபையின் மாதாந்த அமர்வு 25/10 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போதே அவர் இதனை சுட்டிக்காட்டியிருந்தார்.இது தொடர்பாக நகரசபை உறுப்பினர் பிரகாஷ் மேலும் தெரிவிக்கையில்;
மீசாலை-அல்லாரை வீதி ஊடாக தினமும் பல கனரக வாகனங்கள் பயணிக்கின்றன.தற்போது குறித்த வீதியில் உள்ள மதவின் அடிப்பாகம் கடுமையாக சேதமடைந்திருப்பதால் கனரக வாகனங்கள் பயணிக்கும் போது மதவு இடிந்து விழும் அபாயம் காணப்படுகிறது.தற்போது மாரி காலம் ஆரம்பித்திருப்பதால் மேலும் அபாயநிலை அதிகரித்துக் காணப்படுகிறது.எனவே அபாய நிலைமையை கருத்திற்கொண்டு சாவகச்சேரி நகரசபை உரிய வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு தெரியப்படுத்தி மதவினை சீர்செய்ய வேண்டும் என மேலும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
கருத்துக்களேதுமில்லை