தாவடி வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு நிதி உதவி.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சமூக மேம்பாட்டுப் பிரிவினரால் 12/10 புதன்கிழமை தாவடி வடக்கு ஜே/194 கிராமத்தை சேர்ந்த மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு ஒருதொகை நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மாதர் கிராம அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்களுக்கு சுழற்சி முறையில் கடன் வழங்குவதற்காக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கனடா முக்கியஸ்தர் கே.கந்தசாமியின் நிதிப் பங்களிப்பில் குறித்த உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
அன்பளிப்பு நிதி கையளிப்பு நிகழ்வில் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன்,வலி தெற்கு பிரதேசசபை தலைவர் க.தர்ஷன்,தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஊடக இணைப்பாளர் இ.தயாபரன்,சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் கிஷோர் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
மேலும் குறித்த நிகழ்வில் அண்மையில் வெளியான க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளில் வர்த்தக பிரிவில் 3ஏசித்தி பெற்ற மாணவி கா.நந்தாயினியின் பெறுபேற்றைப் பாராட்டி கே.கந்தசாமியின் நிதிப் பங்களிப்பில் இருபதாயிரம் ரூபாய் நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை