தமிழருக்கான அரசியல் தீர்வு நிச்சயம் – நீதியமைச்சர் வாக்குறுதி

புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வே தமிழ் மக்களின் பிரதான எதிர்பார்ப்பு அதை நாம் நிறைவேற்றிய தீருவோம் என நீதி அமைச்சர் விஜதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எம்மை சந்திக்கும் சர்வதேச பிரதி நிதிகளும் புதிய அரசமைப்பு தொடர்பிலும், தேசிய இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வு தொடர்பிலும் முக்கியத்துவம் வழங்கி கலந்துரையாடி வருகின்றனர் எனவே இந்த கருமத்தில் நாம் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்.

ஒரு வருடத்துக்குள் தீர்வுக்கான அனைத்து பணிகளும் நிறைவுக்கு வரவேண்டும் என்பதை அதிபர் ரணில் விக்ரமசிங்க எம்மிடம் தெரிவித்துள்ளார்.

 

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்

தமிழருக்கான அரசியல் தீர்வு நிச்சயம் - நீதியமைச்சர் வாக்குறுதி | A Political Solution For Tamils Is Certain

அதற்கு முன் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் காணி விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து அதற்குரிய தீர்வுகளை அரசு வழங்கும் அதன் ஒரு அங்கமாகவே கைதிகள் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஏனையோரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். நல்லாட்சி அரசியல் தீர்வு விடயத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியது ஆனால் தற்போது கூட்டமைப்பின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று அர்த்தமில்லை. ஒத்துழைப்பு கிடைக்கிறது ஆனால் அந்த ஒத்துழைப்பு முழுமையான ஒத்துழைப்பாக இருக்க வேண்டும்.

 

தமிழருக்கான அரசியல் தீர்வு நிச்சயம் - நீதியமைச்சர் வாக்குறுதி | A Political Solution For Tamils Is Certain

வடக்கு கிழக்கில் காணி விவகாரம் தொடரில் பலமுறைப்பாடுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எம்மிடம் முன்வைத்துள்ளனர். இவை தொடர்பில் ஆராய்ந்து விரைவில் தீர்வு காண்போம். எந்த தரப்பும் பாதிக்காத வகையில் நாம் தீர்மானங்கள் எடுப்போம்” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.