கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பம்.
தமிழ்த்தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு, இன்றையதினம் (2022.11.06) காலை, கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பிக்க்ப்பட்டுள்ளன.
கனகபுரம் மாவீரர் துயிலுமில்லப் பணிக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச் சிரமதானப் பணிகளில், அப் பணிக்குழுவின் செயலணி உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோரோடு, தமிழ்த்தேசியப் பயணத்தில் தன்முனைப்பாய் இணைந்துபயணிக்கும் இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
கருத்துக்களேதுமில்லை