மாவீரர் தின நினைவேந்தல் மேற்கொண்டால் சட்ட நடவடிக்கை – காவல்துறை அச்சுறுத்தல்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் இன்றைய தினம்(6) சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் அங்கு சென்ற அடம்பன் காவல்துறையினர் சிரமதானம் மேற்கொண்டமை குறித்து விசாரணைகளை மேற்கொண்ட தோடு, மாவீரர் தின நினைவேந்தல் மேற்கொண்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அச்சுறுத்தியுள்ளனர்.

காவல்துறை அச்சுறுத்தல்

 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் இன்றைய தினம் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

எதிர்வரும் 27ஆம் திகதி (27-11-2022) மாவீரர் தின நினைவேந்தல் இடம்பெறவுள்ள நிலையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் சிரமதானம் செய்யப்பட்டு வருகிறது.சிரமதானம் முடியும் நிலையில் துயிலும் இல்லப் பகுதிக்கு வந்த அடம்பன் காவல்துறையினர் சிரமதானம் மேற்கொண்டமை குறித்து விசாரணைகளை மேற்கொண்டதோடு, எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தின நினைவேந்தல் மேற்கொண்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்து அடம்பன் காவல்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட காவல்துறை குழுவினர் அங்கிருந்து சென்றனர்

.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.