கடமை நேரத்தில் கைது செய்யப்பட்ட தொடருந்து ஊழியர் – வெளியாகிய பின்னணி
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று வந்து கொண்டிருந்த இரவு நேர தபால் தொடருந்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் மது போதையில் இருந்த நிலையில் அனுராதபுரம் தொடருந்து பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
தொடருந்தின் பிரதான கட்டுப்பாட்டாளர்,அனுராதபுரம் தொடருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு அறிவித்ததை அடுத்து, அனுராதபுரம் தொடருந்து நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, கைது செய்யப்படும் போது ஊழியரிடம் இருந்து மது வாசனை வீசியதாக தெரியவந்துள்ளது.
வைத்திய பரிசோதனை
ஊழியர் அனுராதபுரம்காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அனுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர் மது அருந்தி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட தொடருந்து ஊழியர் மாளிகாவத்தை தொடருந்து தரிப்பிட அலுவலகத்தின் கீழ் பணிபுரிவதாக தெரியவந்துள்ளது.
குறித்த ஊழியர் தொடர்பில் தொடருந்து திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை