பாரிஸ் வீதிகளில் கொட்டிக்கிடந்த பெருந்தொகை யூரோ!

பாரிஸ் பாரிஸின் புறநகர் பகுதியான வால்டி மாறன் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் ஏரிஎம் இயந்திரம் ஒன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ள நிலையில் அங்கு வீதிகளில் பெருந்தொகை யூரோ கொட்டிக்கிடந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Saint-Maur-des-Fossés அவெனு கம்பெத்தாவில் ஏரிஎம் இயந்திரம் ஒன்று அதிகாலை 3.30 மணி அளவில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. ஏரிஎம் இயந்திரத்தில் இருந்த மொத்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாரிஸ் வீதிகளில் கொட்டிக்கிடந்த பெருந்தொகை யூரோ! | Euro Poured On The Streets Of Paris

ஏரிஎம் இயந்திரம் தகர்ப்பு

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றள்ளனர். இந்நிலையில் ஏரிஎம் இயந்திரம் அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்தின் அருகே 20 மற்றும் 10 யூரோ தாள்கள் பல கொட்டப்பட்டு கிடந்துள்ளதை அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர்.

இயந்திரத்துக்குள் உள்ள பணப்பெட்டி 30 மீற்றர் தொலைவில் வீசப்பட்டிருந்தது. அதற்குள் இருந்த பணத்தினை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றுள்ளனர். கொள்ளையர்கள் பல பைகளில் பணத்தை நிரப்பி மூட்டை மூட்டையாக வாகனத்திற்கு ஏற்றிக் கொண்டுசெல்வதனை மக்கள் அவதானித்து பொலிஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

பாரிஸ் வீதிகளில் கொட்டிக்கிடந்த பெருந்தொகை யூரோ! | Euro Poured On The Streets Of Paris

 

கொள்ளையர்கள் இரண்டு வாகனத்தில் வருவகைத்தந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதேசமயம் கொள்ளையர்கள் கைரேகை அடையாளங்கள் அல்லது அவர்களை கண்டுபிடிக்க கூடிய தடயங்கள் எதனையும் விட்டு செல்லவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இயந்திரத்திற்கு அருகிலும் அந்த வீதிகளிலும் பொருத்தப்பட்டுள்ள சீசீடீவி கமராக்களை சோதனையிட்டு வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.