எனக்கு இரண்டு வருடங்களுக்குள் 6அமைச்சு மாற்றங்கள் கிடைத்துள்ளன-இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த.
இரண்டு வருட காலத்திற்குள் ஆறு அமைச்சுப் பதவிகளை தான் வகித்திருப்பதாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
அண்மையில் கைதடியில் நிறுவப்பட்ட பனை அபிவிருத்திச்சபை தலைமைக் காரியாலய திறப்பு விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
பனை அபிவிருத்திச் சபைத் தலைவரின் தீவிர முயற்சியால் 45வருடங்களின் பின்னர் பனை அபிவிருத்திச் சபைக்கு சொந்தக் கட்டடம் கிடைத்துள்ளது.வடக்கு மாகாணத்தில் பனங் கைத்தொழில் பெறுமதி வாய்ந்த கைத்தொழில் என்பதனை அறிந்துள்ளேன்.இந்த பனங் கைத்தொழில் உற்பத்திகளுக்கு மேற்கத்தேய நாடுகளில் சிறந்த சந்தை வாய்ப்பு காணப்படுகிறது.பனை அபிவிருத்திச் சபை புதிய கட்டடத்தில் வருமானம் ஈட்டும் துறையாக மிளிர வாழ்த்துகிறேன்.அத்துடன்
நான் கடந்த 2வருடங்களுக்குள் 6அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளேன். பெருந்தெருக்கள் அமைச்சு,மாணிக்கக்கல்,தங்க ஆபரணங்கள் அமைச்சு,சிறைச்சாலைகள் அமைச்சு ,கப்பல்துறை துறைமுக இராஜாங்க அமைச்சர்,நகர அபிவிருத்தி அமைச்சர் ஆகிய அமைச்சுப் பதவி மாற்றங்கள் எனக்கு கிடைத்தன.தற்போது புதிய ஜனாதிபதியின் பதவி ஏற்பின் பின்னர் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுளேன். என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை