அவுஸ்திரேலியாவில் சிறிலங்கா துடுப்பாட்ட வீரர் சாமிக்க கருணாரத்ன அடிதடி..! சூதாட்ட விடுதியில் சம்பவம்

20க்கு 20 உலக கிண்ண துடுப்பாட்ட போட்டியில் விளையாட அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த இலங்கையின் அணியின் சகல துறை விளையாட்டு வீரர் சாமிக்க கருணாரத்ன, சிட்னி நகரில் கெசினோ சூதாட்ட விடுதி ஒன்றில் மோதலை ஏற்படுத்திக்கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

கெசினோ சூதாட்ட நிலையத்தில் இருந்த ஒருவரை சாமிக்க கருணாரத்ன தாக்கியுள்ளதாகவும் கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக மற்றும் பானுக ராஜபக்ச ஆகியோர் தலையிட்டு சமரசம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

20க்கு 20 உலக கிண்ண துடுப்பாட்ட போட்டியில் விளையாட அவுஸ்திரேலியாவுக்கு சென்ற இலங்கை துடுப்பாட்ட அணிக்கு விருந்துகளில் கலந்துக்கொள்ளுமாறு சுமார் 20 அழைப்புகள் கிடைத்துள்ளது.

ஒழுக்க விரோத நடத்தைகள் தொடர்பாக முறைப்பாடுகள் 

 

அவுஸ்திரேலியாவில் சிறிலங்கா துடுப்பாட்ட வீரர் சாமிக்க கருணாரத்ன அடிதடி..! சூதாட்ட விடுதியில் சம்பவம் | Chamika Karunaratne Sydney Casino Club

எனினும் அணியின் முகாமைத்துவம் 5 விருந்துகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியிருந்தது.

எனினும் சில துடுப்பாட்ட வீரர்கள், அணியின் முகாமையாளரை ஏமாற்றி வரம்பு மீறி நடந்துக்கொண்டதாகவும் சில வீரர்கள் வரையறுக்கப்பட்ட நேரத்தை கடந்தே தங்கியிருந்த விடுதி அறைகளுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே தனுஷ்க குணதிலக்கவின் சம்பவத்தின் பின்னர், துடுப்பாட்ட வீரர்களின் ஒழுக்க விரோத நடத்தைகள் தொடர்பாக பல முறைப்பாடுகள் விளையாட்டுத்துறை அமைச்சு கிடைத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் மருத்துவர் அமல் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.