17 துறைசார் மேற்பார்வை குழுக்களுக்கான உறுப்பினர்கள் இன்று நியமனம்

 

துறைசார் மேற்பார்வை குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் இன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

அதன்போது, வங்கி விவகார மற்றும் நிதிச் சேவைகள் தொடர்பான குழு (Committee on Banking and Financial Services), பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குழு (Committee on Economic Stabilization) மற்றும் வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான குழு ஆகியவற்றின் நியமனம் மேற்கொள்ளப்படும் என்று சபாநாயகர் இன்று (08) தமது அறிவிப்பில் தெரிவித்தார்.

அண்மையில் ஜனாதிபதி, சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தில், 17 பாராளுமன்ற மேற்பார்வை குழுக்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

இதேவேளை, பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் மற்றும் உள்நாட்டு இறைவரி சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 8 மனுக்களின் பிரதிகள் தமக்கு கிடைத்துள்ளதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்