கனடாவில் நடத்தப்பட்ட ஜிம்னாஸ்டிக் போட்டியில் தென்மராட்சி மாணவி சாதனை!

கனடாவில் ஒன்ராறியோ மாகாணத்தில் நடத்தப்பட்ட 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 2022 ஆம் ஆண்டுக்கான ஜிம்னாஸ்டிக் போட்டியில் செல்வி அபிசா அகிலகுமாரன் தங்கப்பதக்கத்தைப் பெற்றுத் தனது பெற்றோருக்கும் தாய் மண்ணுக்கும், எமது தமிழ் சி.என்.என். குழுமத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நடைபெற்ற Tamil mirror Awards Gala Night இல் செல்வி அபிசா அகிலகுமாரன் கௌரவிக்கப்பட்டார்.

இன, மத, மொழி பேதங்கடந்து நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் கைதடி நுணாவில் சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட தமிழ் மாணவி வெற்றிபெற்றமையால் அவரைப் பல இனத்தவர்களும் பாராட்டி, வாழ்த்தியிருந்தனர்.

எமது தமிழ் சி.என்.என். குழுமத்தின் நிர்வாக இயக்குநர் கலாநிதி அகிலகுமாரன் – சர்மிளா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வி அபிஷா என்பதால் அவரைத் தமிழ் சி.என்.என். குழுமமும் மேலும் பல்வேறு சிறப்புக்களைப் பெற்று வெற்றியீட்டவேண்டுமென மனம்மிகமகிழ்ந்து வாழ்த்துகின்றோம்.

 

 

கௌரவிக்கப்பட்ட காணொளி இணைப்பு

https://fb.watch/gG6TVuu6Q6/

 

 


கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.