ஐ.எம்.எவ் இன் உதவி கிடைக்குமா – பீரிஸ் வெளியிட்ட சந்தேகம்

நாட்டில் தேர்தல் நடத்தப்படாவிட்டால் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியுதவியை எதிர்பார்க்க முடியாது எனவும், வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை ஈடுகட்ட ஏற்றுமதி மற்றும் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் இன்று (10) தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு அரசின் செலவினம் வருவாயை விட மூன்று மடங்கு அதிகமாகும், எனவே  அந்நியச் செலாவணியைப் பெறும் முறையைக் கண்டறிய வேண்டும் என்று பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் குறிப்பிட்டார்.

ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை

ஐ.எம்.எவ் இன் உதவி கிடைக்குமா - பீரிஸ் வெளியிட்ட சந்தேகம் | Without Elections There Is No Aid

 

இலங்கையின் பிரதான ஏற்றுமதி சந்தையான மேற்கு ஐரோப்பாவின் வரிச்சலுகையான ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை ஒரு பெரிய நன்மை என்றும் தெரிவித்தார். ஆனால், ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை என்பது உரிமையோ, பரிசோ அல்ல, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று கூறிய பேராசிரியர், ஜனநாயகம் தரநிலையால் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே முக்கிய நிபந்தனை என்றார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம்

ஐ.எம்.எவ் இன் உதவி கிடைக்குமா - பீரிஸ் வெளியிட்ட சந்தேகம் | Without Elections There Is No Aid

 

சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட ஒப்பந்தத் தரவுகள் நாடாளுமன்ற நிதிக் குழுவிற்கு வெளிப்படுத்தப்படவில்லையென்றாலும், மேற்படி தரவுகள் வேறு நபர்களிடம் இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜி. எல். பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.