இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு…

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும்  அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கும், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு இன்று 09.11.2022
சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஜனாப் S.L. முகம்மது ஹனீபா அவர்களின்  தலைமையில் இடம்பெற்றதுடன்
பிரதம அதிதியாக திரு வே.ஜெகதீஸன்
மேலதிக அரசாங்க அதிபர் கலந்து சிறப்பித்தார்,சிறப்பு அதிதிகளாக
உதவி பிரதேச செயலாளர் ஜனாப் UM. அஸ்லம், நிருவாக உத்தியோகத்தர் ஜனாப் K.B.சலீம்  மற்றும் திரு கு.ஜெயராஜி மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்,திரு.ந.பிரதாப் மாவட்ட இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், சம்மாந்துறை பிரதேச இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கெளசல்யவாணி உருத்திரமூர்த்தி மற்று கலாசார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன்,
இந்நிகழ்வில் திணைக்களத்தின் செயற்பாடுகள், அறநெறிப்பாடசாலைகளின் செயற்பாடுகளை விஸ்தரிப்பது தொடர்பான நடவடிக்கைகள், புதிய பாடத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் என்பன இடம்பெற்றது இதில் ,அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் ஏன பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.