இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு…
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும்
அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான
கருத்தரங்கும், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு இன்று 10.11.2022 பிப 2.30 மணிக்கு காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு சி.ஜெகராஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன்
இந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு எஸ்.இராஜகுலோந்திரன், நிந்தவூர் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஜனாப்.எம்.சரீம் , திரு.கு.ஜெயராஜி மாவட்ட இந்து காலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்,திரு.ந.பிரதாப் மாவட்ட இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், காரைதீவு”பிரதேச இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சிவலோஜினி சிவராஜா,நிந்தவூர் பிரதேச இந்து கலாசார அபிவிருத்தி திருமதி சுஜிவனி பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டதுடன்,
இந்நிகழ்வில் திணைக்களத்தின் செயற்பாடுகள், அறநெறிப்பாடசாலைகளின் செயற்பாடுகளை விஸ்தரிப்பது தொடர்பான நடவடிக்கைகள், புதிய பாடத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் என்பன இதில் காரைதீவு, நிந்தவூர்,அட்டப்பளம்,அட்டாளசேனை,திராய்கேணி ஆகிய ,அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


































கருத்துக்களேதுமில்லை