விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பல்கலை மாணவி – பெற்றோர் எடுத்த தீர்மானம்

பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

23 வயதுடைய சச்சினி கலப்பத்தி என்ற மாணவியே உயிரிழந்த நிலையில் அவரது கண் உட்பட உடற்பாகங்களை பேராதனை வைத்தியசாலைக்கு தானமாக வழங்க பெற்றோர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த 1 ஆம் திகதி குறித்த மாணவியும் அவரது இரண்டு நண்பிகளும் ஹில்டா ஒபேசேகர விடுதிக்கு சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகினர்.

 

இறுதிக் கிரியை

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பல்கலை மாணவி - பெற்றோர் எடுத்த தீர்மானம் | Peradeniya University Student Killed In Accident

இந்நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குறித்த யுவதி தங்காலை பெண்கள் கல்லூரியின் பழைய மாணவி என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த மாணவியின் இறுதிக் கிரியைகள் கடந்த வெள்ளிக்கிழமை தங்காலை பொது மயானத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.