தொடருந்துடன் மோதி விபத்து – பரிதாபமாக உயிரிழந்த 25 வயது இளைஞன்

சித்தாண்டி – முறக்கொட்டான்சேனை தேவபுரம் பகுதியில் தொடருந்துடன் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி நேற்றிரவு (11) சென்ற தொடருந்தில் மோதியே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் சித்தாண்டி – 1, அலைமகள் வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய சிவகுமார் குவேந்திரன் என என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

 

பிரேத பரிசோதனை

தொடருந்துடன் மோதி விபத்து - பரிதாபமாக உயிரிழந்த 25 வயது இளைஞன் | Young Man Died After Being Hit By A Train

உயிரிழந்துள்ள இளைஞனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.