படைப்பாளர்களின் திறமைக்கான ஆக்கங்கள் கௌரவிக்கப்பட்டவில்லை என்பது நிதர்சனம் ஆகின்றது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் வரலாறுகளை எடுத்துப்பார்தால் ஆரம்பகால படைப்பாளர்கள் வாழ்ந்த காலத்தில் சரியான முறையில் அவர்களுக்கு கௌரவிக்கப்படவில்லை. என்பதே ஆகின்றது. திறமை யின்மையினை வெளிப்படுத்த தவறிவிட்டார்கள் யாழ் மாவட்டத்தின் வரலாற்றினை எடுத்து பார்த்தால் தெரியும் தரமான எழுத்தாளர்கள் படைப்பாளர்கள் மற்றும் ஆக்க இலக்கிய நூல்கள் கவிதைகள் எழுதியவர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் சரியான முறையில் கௌரவிக்கப்படவில்லை அந்த நிகழ்வு தற்போது ஈடுசெய்யப்பட்டுள்ளது. இது உண்மையில் வெளிப்படுத்த வேண்டும் யாழ்ப்பாணத்தில் தரமான கவிஞர்கள் இருந்தால் அதனை வெளிப்படுத்த வேண்டும்.

தமிழ்ச்சங்கு கலைஇலக்கிய விருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்று யாழ் தனியார் விடுதி ஒன்றில் தமிழ்ச்சங்குயின் இயக்குநர் கலாநிதி வி.ஜனகன் தலைமையில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் பிரதம அதிதிகளாக கலந்துகொண்ட யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்,யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆகியோர்கள் கலந்துகொண்டு அபிமானவிருது, ஆளுமைவிருது,கலை விருது சமூக ஊடகங்களுக்கான விருது என 22 நபர்களுக்கான விருதுகளும் வழங்கி வைத்தனர்.

இதன்போது கருத்து தெரிவிக்கையில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில். சமூகத்தினாலும் மறக்கப்பட்டவிட்டார்கள் தரமான ஆக்க இலக்கியங்களை தரமான திரைப்படங்களையும் இன்னும் இன்னும் தந்து அதற்கான ஆவணப்பதிவு சிறப்பாக இடம்பெறவேண்டும் எமது சமூகத்தின் இருப்பு அதில்தான் தங்கியி ருக்கின்றது.எமது இளையதலைமுறையினர்கள் அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் என்ற நம்பிக்கை யிருக்கின்றது.

கலைஞர்களை விமர்சிப்பது தொடர்பாக எமக்கு தெரியும் அவ்வாறான முயற்சியினை எந்தவித தயக்கமும் இன்றி கலைஞர்களுக்கான பாராட்டுகளை தெரிவிக்கின்றேன். என்றார்.

இதனை தொடர்ந்து சிறுவர் உரிமை நூல் வெளியீடும் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் இலங்கையின் உள்ளூர்கலைஞர்களின் நடிப்புத்துறையினை மேற்கொண்டுள்ள மூக்குத்திப்பூதிரைப்படத்தின் அறிமுகம் இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் ஊடக ஆளுமையாளர் மதனவாசன் ஊடகவியாளர் எழுத்தாளர் புரவலர் ஹாசீம் உமர், மற்றும் எழுத்தாளர்கள் இலக்கியவாதிகள் கலாச்சார அணிசேர்கலைஞர்கள் உள்ளூர்குறும்படஇயக்குநர்கள் நடிகர்கள்,நடிகைள் மற்றும் உறவினர்கள் ஊடகவியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்