கட்டைக்காடு முள்ளியான் பகுதியில் வாள்வெட்டு சம்பவம்!!!!!!!

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட

26வயதுடைய கல்வியற் கல்லூரி மாணவன் ஒருவர் இன்று அதிகாலை 4.00 மணியளவில் வீடு ஒன்றினை முற்றுகையிட்டு அடாவடி செய்துள்ளார்.

வீட்டின் கதவுகளை வாள்களால் தாக்கியும் கற்களால் எறிந்தும் சேதப்படுத்தியுள்ளார்.

குறித்த வீட்டில் தனிமையில் இருந்த வயோதிப தாய் ஒருவர் மிகுந்த அச்சம் கொண்டு அயலவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.

குடும்ப தகராறு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கல்வியற்கல்லூரி மாணவர் ஒருவர் வாள்களுடன் அப்பகுதியை அச்சுறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நேற்றைய தினம் இரு குடும்பங்களுக்கு இடையில் முரண்பாடு நிலவி வந்த நிலையில் இன்று அதிகாலை குறித்த மாணவன் வாள்களுடன் நுழைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்