பலப்பரீட்சைக்கு தயாராகும் அரசாங்கம்..! தீவிர காய் நகர்த்தல்களில் இரண்டு தரப்பு

அரசாங்கத்திற்குள், பொதுஜன பெரமுனவின் ராஜபக்ச அணியினர் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி தத்தமது பலத்தை அதிகரித்துக்கொள்ள தீவிரமான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களின் அதிருப்திக்கு உள்ளாகி இருக்கும் பொதுஜன பெரமுனவின் பசில் ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அணியினரை மீண்டும் வலுப்படுத்துவதற்காக எஸ்.பி.திஸாநாயக்க தலைமையில், அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அழுத்தங்களை கொடுக்கும் நடவடிக்கை ஒன்று அரசாங்கத்திற்குள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஜோன்ஸ்ட் பெர்னாண்டோ, ரோஹித்த அபேகுணவர்தன,சனத் நிஷாந்த ஆகியோருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகளை பெற்றுக்கொடுப்பதற்காக அதிபருக்கு அழுத்தங்களை கொடுப்பதே இதன் பிரதான நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவி

 

 

பலப்பரீட்சைக்கு தயாராகும் அரசாங்கம்...! தீவிர காய் நகர்த்தல்களில் இரண்டு தரப்பு | Govt Preparing For Multi Examination

இந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகளை வழங்கும் எண்ணம் அதிபருக்கு இல்லை.

இவர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குவதன் மூலம் அரசாங்கம் தேவையற்ற பல பிரச்சினைகளை உருவாக்கிக்கொள்ள நேரிடும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரு அணியின் நிலைப்பாடாக உள்ளது.

 

 

இதனிடையே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தில் இணைநத்து, அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியை அரசாங்கத்திற்குள் பலப்படுத்தும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன மிக விரிவான இரகசிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார்.

இதன் பிரதிபலனாக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரபல பாத்திரமான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுகாதார அமைச்சு பதவியை எதிர்பார்த்து அரசாங்கத்தில் இணையவுள்ளதாக பேசப்படுகிறது.

அரசாங்கத்தில் இணைய தயாராகி வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண் நாடாளுமன்ற உறுப்பினரும் மேலும் இரண்டு முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இணைவது தொடர்பான உறுதியாள அறிவிப்பு எதனையும் செய்யவில்லை எனவும் தகவல்கள் கூறுகின்றன.

இவ்வாறான நிலைமையில், அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னதாக அரசாங்கத்திற்குள் தமது தரப்பை பலப்படுத்தி, தேவையற்ற அழுத்தங்களை சமாளிக்கும் வாய்ப்பு இல்லாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.