தமிழ் தேசிய கூட்டமைப்பை விபச்சார விடுதி என்று கூறியவர் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். உடனடியாக வாபஸ் பெற்று பொதுமன்னிப்பு கேட்கவேண்டும் !


சபை அமர்வில் காரைதீவு தவிசாளர் ஜெயசிறில் கண்டனம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பை விபச்சார விடுதி என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வீட்டுக்குள் இருந்து கல்லெறிந்து இருக்கின்றார் .அவர் உண்மையில் மன நோயால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடும். அவர் உடனடியாக அந்த கருத்தை வாபஸ் பெற வேண்டும் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் .

என்று காரைதீவு பிரதேச சபையின் 57ஆவது மாதாந்த அமர்வு இன்று(14) திங்கட்கிழமை நடைபெற்ற பொழுது தலைமை உரையாற்றிய பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் கண்டனம் தெரிவித்து உரையாற்றினார்.

57 வது மாதாந்த சபை அமர்வு சபையின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

சபையில் உறுப்பினர்களின் குடும்ப உறுப்பினர்களும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சிலரும் வருகை தந்திருந்தார்கள்.

அங்கு தவிசாளர் மேலும் உரையாற்றுகையில்…

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரம்பரிய மான கட்சி .தலைவரால் உருவாக்கப்பட்ட கட்சி. அந்த கட்சிக்குள் இருந்து கொண்டு அதனை விமர்சிப்பது என்பது கீழ்த்தரமானது. கேலிக்குரியது .அவர் வேண்டுமானால் அதிலிருந்து விலகி விட்டு விமர்சிக்கட்டும். ஆனால் உள்ளுக்குள்ளே இருந்து இந்த விமர்சனத்தை செய்வது தனது தாயை ஒரு விபச்சாரி என்று சொல்வது போன்று. எனவே அவரது அந்த கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.. என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.