இலங்கையின் பன்முக ஆளுமையாளர் ஜெ.லெனின் மதிவானம் காலமானார்
இலங்கையின் கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் மற்றும் பிரபல எழுத்தாளர் நேற்றையதினம் (13) காலமானார்.
மலையகத்தின் சிறந்த கல்விமான், எழுத்தாளர், திறனாய்வாளர் என பன்முக ஆளுமைமிக்க ஜெ.லெனின் மதிவானம் 51ஆவது வயதில் இயற்கை எய்தினார்.
மேலும், இவர் முன்னாள் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளராகவும் பணியாற்றியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் விரிவுரையாளர்
ஹட்டன் – காசல்ரீயை பிறப்பிடமாக கொண்ட எழுத்தாளர் லெனின் மதிவானம், ஆசிரியராகவும் கொட்டகலை ஆசிரியர் கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளராகவும் கடமையாற்றியிருந்தார்.
இவரது இழப்பானது மலையக கல்வித்துறைக்கும் இலங்கையின் கல்வித்துறைக்கும் ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை