சட்டக்கல்லூரி மாணவர்கள் தமது தாய்மொழியில் பரீட்சைக்கு முகம்கொடுக்க நடவடிக்கை எடுங்கள்-அங்கஜன் எம்.பி வேண்டுகோள்.

சாவகச்சேரி நிருபர்
இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்கள் தமது தாய் மொழியில் பரீட்சைக்கு தோற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும்;
2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய நீதி அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு விதிகளின் படி சட்டக் கல்லூரி மாணவர்கள் முதலாம் ஆண்டு தேர்வில் பல பாடங்களுக்கு ஆங்கில மொழியில் தோற்ற வேண்டிய கட்டாயம் காணப்பட்டது.
இதனால் 500க்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் தாய் மொழியில் பரீட்சைக்கு தோற்ற முடியாது பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை சட்டக்கல்லூரி மாணவர்களை சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பரீட்சைக்கு தோற்ற அனுமதிப்பது தொடர்பாக பரிசீலித்து ,சம்பந்தப்பட்ட பிரிவுகளைத் திருத்துவதற்கான புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.என மேலும் அவர் தனது கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.