உயர் அதிகாரி கழுத்தில் பிடித்தமை தவறில்லை – பெண் காவல்துறை உத்தியோகத்தர்கள் வாக்குமூலம்

காவல்துறை உயர் அதிகாரி கழுத்தில் பிடித்தமை தவறில்லை என பாதிக்கப்பட்ட பெண் காவல்துறை உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் இடம்பெற்ற போராட்டம் ஒன்றின் போது உயர் காவல்துறை அதிகாரியொருவர் இரண்டு பெண் காவல்துறை உத்தியோகத்தர்களை கழுத்தில் பிடித்து தள்ளும் காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இரண்டு பெண் காவல்துறை உத்தியோகத்தர்களும் வாக்குமூலம் 

 

 

உயர் அதிகாரி கழுத்தில் பிடித்தமை தவறில்லை - பெண் காவல்துறை உத்தியோகத்தர்கள் வாக்குமூலம் | Wrong To Hold A Top Police Officer

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இரண்டு பெண் காவல்துறை உத்தியோகத்தர்களும் வாக்குமூலம் அளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

உயர் அதிகாரியின் செயற்பாட்டினால் தமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது என பெண் காவல்துறை உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, கடமையில் ஈடுபடுவதனை ஊக்கப்படுத்தும் நோக்கில் தாம் இரு உத்தியோகத்தர்களையும் கழுத்தில் பிடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள குறித்த பிரதம காவல்துறை பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.