இவ்வாண்டில் இதுவரை 54,000 டெங்கு நோயாளிகள், 25 MOH பகுதிகள் அதிக ஆபத்தில் உள்ள பகுதிகளாக அடையாளம்

வருடத்தின் 45வது வாரத்தில் 1,053 பேர் டெங்கு அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை , ஜனவரி முதல் இன்று வரை டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 54,083 ஆக அதிகரித்துள்ளது , மேலும் 25 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பகுதிகள் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவல்களின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து 42% டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். களுத்துறை மாவட்டம் 5%., கண்டி மாவட்டத்தில் இருந்து 10%, புத்தளம் மாவட்டத்தில் இருந்து 8%, பதுளை மாவட்டத்தில் இருந்து 4% நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

45 ஆவது வாரத்தில், பிலியந்தலை, ஹோமாகம, பிடகோட்டே, கொத்தடுவ, பியகம, திவுலப்பிட்டிய, கட்டான, மஹர, மீரிகம, களுத்துறை, ஹாரிஸ்பத்துவ, வத்தேகம, , மஹவெவ, மற்றும் வரக்காபொல MOH பிரதேசங்களில் உயர் அபாய நிலைகள் குறைந்துள்ளதுடன், நீர்கொழும்பு, பாணந்துறை, யட்டிநுவர, கரந்தெனிய, மன்னார், புத்தளம் உள்ளிட்ட MOH பகுதிகள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் தொற்றாநோய் பிரிவின் அறிக்கையின்படி, ஜனவரி முதல் இன்றுவரை மொத்தம் 54,083 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிகபட்ச நோயாளர்களின் எண்ணிக்கை கொழும்பு மாவட்டத்தில் 11,364 ஆகவும், இரண்டாவது அதிக எண்ணிக்கையான நோயாளிகள் கம்பஹா மாவட்டத்திலிருந்து 7,803 ஆகவும் உள்ளனர்.
மேலும், கண்டி மாவட்டத்தில் 4,897 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 3,435 பேரும், காலி மாவட்டத்தில் 3,273 பேரும், கேகாலை மாவட்டத்தில் 2,704 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 2,681 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 2,434 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 2,036 பேரும் பதிவாகியுள்ளனர். மற்ற மாவட்டங்களில் இருந்து 2,000க்கும் குறைவான நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர, தனியார் மற்றும் அரச நிறுவனங்கள், தொழிற்சாலைகள், நிர்மாணத் தளங்கள், பாடசாலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற இடங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள இடங்களைக் கண்டறிந்து சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பது முக்கியம். என்றார்.

இதேவேளை, வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக கூறி டெங்கு நோயாளர்கள் சிலர் வீடுகளிலேயே தங்கியிருப்பதாக சுகாதார அமைச்சின் தொடர்பாடல் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் அண்மையில் தெரிவித்திருந்தார். இது ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை என்றும், டெங்கு நோயாளிகள் மருத்துவமனைகளில் அதிக கவனிப்பைப் பெறுவதால் நோயாளிகள் உரிய மருத்துவ வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.