8 இலங்கையர்கள் உட்பட 27 பேர் கைது!!
நைஜீரியாவில் உள்ள நைஜர் டெல்டாவில் இருந்து சட்டவிரோதமாக மசகு எண்ணெய் பெற வந்த “ஹீரோயிக் இடூன்” கப்பலில் பணியாற்றிய 8 இலங்கையர்கள் உட்பட 27 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, குறித்த 27 பேரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை நைஜீரிய கடற்படையின் கட்டுப்பாட்டில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர்களில் இந்திய மற்றும் போலந்து பிரஜைகளை விசாரிக்க அந்தந்த நாட்டு தூதரகங்களிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக நைஜீரியாவின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கருத்துக்களேதுமில்லை