பாலியல் தொழிலுக்காக பகிரங்க ஏலம்..! 12 இலங்கைப் பெண்களுக்கு நேர்ந்த பரிதாபம்

ஓமானில் நடைபெற்ற விழா ஒன்றில், அபுதாபிக்கு வீட்டுப்பணிப் பெண்களாக அழைத்துச் செல்லப்பட்ட 12 இலங்கைப் பெண்கள் பாலியல் தொழிலுக்காக பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன​ர் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நாடளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு சபைக்கு அறிவித்தார்.

மேலும், அபுதாபியில் வீட்டுப்பணிப்பெண் தொழிலுக்கு அழைத்துச் செல்வதாக 12 இலங்கைப் பெண்கள் ஓமானுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

 

ஓமானில் நடைபெற்ற விழா ஒன்றில் இப்பெண்கள் பாலியல் தொழிலுக்கு பகிரங்க ஏலத்தில் விற்னை செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை தாங்கிக்கொள்ளாது தமது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்கள், பொருளாதார நெருக்கடியை சரி செய்ய அவர்களின் தன்மானத்தை அடகு வைக்க முடியாது எனவும், இது தொடர்பில் நீதி அமைச்சர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் விதிமுறைகளை மீறி செயற்படுகின்றன.

இப்படியான நிலையால் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம்.

இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு உடனடியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறேன் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.