இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகளை தோற்கடிக்க உதவிய ஆயுதம் இதுவே – பல வருடங்களின் பின் வெளிப்படுத்திய நபர்!
பாக்கிஸ்தானின் ஆயுத உற்பத்தியாளர் ஒருவர், விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின் போது தனது நிறுவனத்தின் ஆயுதங்களே சிறிலங்கா இராணுவத்தினருக்கு பெரிதும் உதவியதாகத் தெரிவித்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தனது நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதம் விடுதலைப்புலிகளிற்கு எதிரான இறுதி யுத்தத்தில் சிறிலங்கா இராணுவம் வெற்றி பெறுவதற்கான முக்கிய பங்களிப்பை வழங்கியது எனவும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தனியார் ஆயுத உற்பத்தி
பாக்கிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்ட தனியார் ஆயுத உற்பத்தி நிறுவனமான டவ்ன் ஆர்மரி நிறுவனத்தின் பொதுமுகாமையாளர் இர்பான் அகமட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“பாக்கிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மிகவும் சிறப்பானவை பயனுள்ளவை அவை யுத்தத்தின் போக்கை தீர்மானிக்கின்றன.
இறுதி யுத்தம்
எனது நிறுவனத்தின் கிரனைட் லோஞ்சர்கள் இலங்கையில் விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தை வெற்றிகொள்வதற்கு உதவின.
எங்கள் இராணுவ தளபதி எங்கள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியை அழைத்து இதற்காக நன்றி தெரிவித்தார் எனவும் தனது நிறுவனத்தின் 30 வீதமான வருமானம் ஏற்றுமதி மூலம் பெறப்படுவதாகவும்” அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை