இயற்கை சரணாலயத்தில் இடம்பெற்ற சட்டவிரோத செயற்பாடு!!

வனவள திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் பக்வந்தலாவ வண்ணத்துப்பூச்சி இயற்கை சரணாலயத்தில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு காய்ச்சிக் கொண்டிருந்த இரு சந்தேக நபர்களை பக்வந்தலாவ காவல்துறையினர் நேற்று (18) கைது செய்தனர்.

குறித்த காட்டில் சிலர் சட்டவிரோத மதுபானம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பகவந்தலாவ காவல்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டதுடன், சந்தேகநபர்கள் இருவரையும் மதுபானம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

 

சந்தேகநபர்களை கைது செய்யும் போது, ​​சந்தேகநபர்கள் மதுபானம் காய்ச்சிக் கொண்டிருந்ததுடன், சந்தேகநபர்களால் காய்ச்சிய 10 லீற்றர் சட்டவிரோத மதுபான ஸ்பிரிட்டை காவல்துறையினர் கைப்பற்றிதுடன் 200 லீற்றர் கோடாவை அழித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பலாங்கொடை மரதன்ன பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், 40 மற்றும் 45 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இயற்கை சரணாலயத்தில் இடம்பெற்ற சட்டவிரோத செயற்பாடு | Illegal Activity In The Nature Reserve

பகவந்தலாவ பிரதேசம் மற்றும் பலாங்கொட மரதன்ன பிரதேசத்தில் உள்ள தோட்ட தொழிலாளர்களுக்கு சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.