பாடசாலை உபகரணங்களின் விலைகளில் எவ்வித அதிகரிப்பும் இல்லை – அரசாங்கம் அறிவிப்பு!!
பாடசாலை உபகரணங்களின் விலைகளில் எவ்வித அதிகரிப்பும் செய்யப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய குறிப்பிட்டார்.
செஸ் வரி அதிகரிப்பினால், பாடசாலை மாணவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் உபகரணங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் இன்று அமைச்சுசார் அறிவிப்பை வெளியிட்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர், “செஸ் வரி திருத்தம், பாடசாலை உபகரணங்களின் விலைகளில் தாக்கம் செலுத்தவில்லை.
இறக்குமதி செய்யப்படும் அச்சு மற்றும் அப்பியாச புத்தகங்கள், பென்சில், அழி இறப்பர் உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கான காகிதம் உள்ளிட்ட ஏனைய பொருட்களுக்கு கடந்த 15 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட செஸ் வரி திருத்தத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை.
எனவே, செஸ் வரி திருத்தத்தினால் இறக்குமதி மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களினால் பாடசாலை உபகரணங்களின் விலைகளில் எவ்வித அதிகரிப்பும் செய்யப்படவில்லை” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை