இவ்வருடம் 270,000 பேர் தொழிலுக்காக வெளிநாட்டுக்கு!

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை 150 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வருட ஜனவரி மாதம் முதல் 2 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பினை பெற்று பல நாடுகளுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த வருட இறுதிக்குள் குறித்த எண்ணிக்கை 3 லட்சமாக அதிகரிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்று சென்றுள்ளவர்களில் 60 சதவீதமானவர்கள் ஆண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு செல்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் விசேட தகமைகள் எதனையும் கொள்ளாதவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.