நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு காண இளைஞர்கள்ஒன்று சேர வேண்டு என சோசலிச இளைஞர் சங்க அமைப்பு கோரிக்கை!!

ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியை கலைத்துவிட்டு புதிய பாராளுமன்றத்தை வலியுறுத்தி பல போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.  அடுத்த கட்டமாக இளைஞர்களை அணிதிரட்டுவதன் ஊடாக புத்திஜீவிகள், பல்வேறு திறமைகளை கொண்ட இளைஞர்கள்

ஒன்றாகி உலகத்தின் மிக முக்கியமான தவிர்க்க முடியாத நாடாக இலங்கையை உருவாக்குவதற்கு அணி திரள வேண்டும் என

சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான சக்தியை திரட்டுவதற்கு யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கின்றோம்.

பொருளாதார ரீதியாக நாடு பாரிய பாதாளத்திற்கு சென்றுள்ள சூழலை ஆட்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். இனவாதத்தை மையமாக கொண்டு கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்திருந்தார்.

டீல்காரர்களுக்கு நாட்டை விற்றதன் காரணமாக தாம் வஞ்சிக்கப்பட்டு விட்டோம் என்று உணர்ந்த இளைஞர் சமூகம் மற்றும் மக்கள் கோட்டாபய ராஜபக்சேவை விரட்டி அடித்தார்கள்.

இந்நிலையில் திட்டம் தீட்டி தனது சேவகன் ரணில் ராஜபக்சவை ஆட்சி அதிகாரத்துக்கு கொண்டு வந்தார்கள்.

ரணில் விக்கிரமசிங்க நாட்டை மீட்டெடுக்க வந்தவர் அல்ல என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருவதோடு மக்களுக்கு எதிரான ஊழல் மோசடியாளர்களை பாதுகாக்கின்ற ஆட்சி அதிகாரத்தை இல்லாதழித்து மக்களுக்கான அரசியலையும் மக்கள் நல ஆட்சியை கட்டி எழுப்புவதற்கான வேலைத் திட்டத்தில் சோசியல் இளைஞர் சங்கம் தொடர்ந்தும் இணைந்திருக்கும்.

நாட்டு மக்களை ஒட்டச் சுரண்டி வரிகளை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அறவிட்டு வருகின்றது. வடக்கு கிழக்கு தெற்கு மலையகம் முஸ்லிம் என்ற அனைத்து பிரதேச மக்களும் பாரிய பொருளாதார பிரச்சினைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.

பாடசாலை உபகரணங்களை வாங்க முடியாத நிலைமை காணப்படுவதுடன் இலவச கல்வி கேள்விக்குறியாக விட்டது. ஒரு காலத்தில் யாழ்ப்பாணம் கல்வித் துறையில் அடையாளத்தை பொறித்திருந்தது. ஆனால் இன்று அந்த நிலைமை வீழ்ச்சி கண்டிருக்கின்றது.

கூலி தொழில் கூட பலரும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். யூரியா, உரப்பிரச்சினை, கிருமி நாசினி போன்ற பல பிரச்சனைகளால் வடக்கு விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

மீன் பிடியை எடுத்துக் கொண்டால் எரிபொருள் பிரச்சனை, இந்திய மீனவர்களுடைய அத்துமீறல்

என்பன அதிகமாக இருக்கின்ற நேரத்தில் அதற்கான சரியான தீர்வை வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது. கடல் வளம் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு தாரைவாக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. காற்றாலை அமைக்க அதானி கம்பெனி வருகின்றது. கடலட்டை பண்ணைக்கு சீனர்கள் வருகின்றார்கள்.

ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியை கலைத்துவிட்டு புதிய பாராளுமன்றத்தை வலியுறுத்தி பல போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.  அடுத்த கட்டமாக இளைஞர்களை அணிதிரட்டுவதன் ஊடாக புத்திஜீவிகள், பல்வேறு திறமைகளை கொண்ட இளைஞர்கள்

ஒன்றாகி உலகத்தின் மிக முக்கியமான தவிர்க்க முடியாத நாடாக இலங்கையை உருவாக்குவதற்கு அணி திரள வேண்டும் என்றார்.

இவ் ஊடக சந்திப்பில் சோசலிச இளைஞர் சங்கத்தின் சதீஸ் செல்வராஜ் மற்றும் இளங்குமரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்

காணொளி இணைப்பு:-https://youtu.be/q6dcpcCZRBo

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.