3 வீடுகளை உடைத்து 16 இலட்சம் பெறுமதியான நகைகளை திருடிய சந்தேகநபர் ஹெரோயினுடன் கைது

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உயரப்புலம் மற்றும் இளவாலை பகுதியில் உள்ள வீடுகளை உடைத்து 16 இலட்சம் ரூபா தங்க நகைகளை திருடிய சந்தேகநபர் ஒருவர் இன்று இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் திருடிய நகைகள் சிலவற்றினை நகை கடையில் அடகு வைத்ததாக பொலிஸாரால் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது அவரிடமிருந்து 130 மில்லிக்கிராம் ஹெரோயின், நகைகள், நகை அடகு வைத்த ஆவணம் மற்றும் 30 ஆயிரம் ரூபா பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர் இளவாலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் ஆவார். குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 21.11 அன்று நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.