ஏற்கெனவே முன்வைத்த கோரிக்கைகளின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கனடிய தமிழர் பேரவை இலங்கை அரசுக்கு வலியுறுத்துகிறது

ஏற்கெனவே முன்வைத்த கோரிக்கைகளின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கனடிய தமிழர் பேரவை இலங்கை அரசுக்கு  வலியுறுத்துகிறது 

2022  ஆகஸ்ட் மாதத்தில் கனடிய தமிழர் பேரவை உட்படப் பலபுலம்பெயர் தமிழர் அமைப்புகள்  மீதான தடையை இலங்கை அரசு நீக்கியதைத் தொடர்ந்து காத்திரமான தொடர் நடவடிக்கைகளை  மேற்கொள்ளவேண்டுமென கனடிய தமிழர் பேரவை இலங்கை அரசைக்  கேட்டிருந்தது. இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டு மூன்று மாதங்களாகியும் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் எதுவும் காணப்படாமையால் இலங்கை அரச தலைவர்கள் , அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் கனடிய தமிழர் பேரவை மீண்டுமொரு தடவை தனது கோரிக்கைகளைச்  சமர்ப்பித்திருக்கிறது.

இலங்கை அரசிடம் முன்வைத்த  10 அம்சக் கோரிக்கை கீழே:

 

 

  1. அனைத்துதமிழ் அரசியல் கைதிகளையும்  விடுதலை செய்ய வேண்டும்

 

  1. பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும்

 

  1. இலங்கைஇராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அனைத்து தனியார் காணிகளையும் விடுவிப்பதோடு வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைபெற்றுவரும் சட்டவிரோத  நில  ஆக்கிரமிப்புக்களை  உடனடியாக நிறுத்த வேண்டும்

 

  1. இலங்கைஅரச நிர்வாகத்தின்  கெடுபிடிகளின்றி அனைத்து தமிழர்களும் உயிர் மாய்த்த தமது உறவினரை நினைவுகூர அனுமதிக்க வேண்டும்

 

  1. பலாலிவிமான நிலையத்தைப் பாவனைக்கு திறந்து விடுவதன்  மூலம் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதித்து வடக்கின் பொருளாதார வளர்ச்சிக்கு இடமளிக்க  வேண்டும்

 

  1. இந்தியஅரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாச்சார மையத்தை  யாழ். மாநகரசபையிடம் கையளிக்க வேண்டும்

 

  1. 2021 இல்நிறைவேற்றப்படடஐ.நா.மனித உரிமைகள் சபையின் தீர்மானம் 46/1ஐ நடைமுறைப்படுத்த வேண்டும்

 

  1. அரசியலமைப்பின்13 ஆவது திருத்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதுடன் மாகாணசபைத் தேர்தல்களையம் விரைவில் நடத்த வேண்டும்

 

  1. நாட்டின்இதர பாகங்களிலும் நடைமுறையில் உள்ள அதே தரத்தில் அமையும் வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் பாதுகாப்பு நிர்வாகம் சீர்படுத்தப்பட வேண்டும். வடக்கு கிழக்கில் தேவைக்குமதிக்கமான படையினரைக் குவிக்காமல் இதர மாகாணங்களில் நிலைகொண்டிருக்கும் படையினரின் எண்ணிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில் படைப் பரம்பல் இருக்க வேண்டும்.   வடக்கிலும் கிழக்கிலும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் வியாபார நடவடிக்கைகளை (பண்ணைகள், உணவகங்கள்,வெதுப்பகங்கள்),நிறுத்த வேண்டும். இவ்வியாபாரப் போட்டிகளினால்  உள்ளூர் விவசாயிகளும்  வியாபாரிகளும் கடும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்

 

  1. மன்னார்மற்றும் காங்கேசன்துறை துறைமுகங்களிலிருந்து  இந்தியாவுக்குப் பயணங்களை மேற்கொள்ளும் வகையில் கப்பல் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்

அத்தோடு இலங்கையில் நிரந்தரமான அரசியல் தீர்வொன்றைக் கொண்டுவரவேண்டும் என கனடிய தமிழர் பேரவை இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளது.

 

 

மேலதிக ஊடகத் தொடர்புகளுக்கு கனடிய தமிழர் பேரவை (416) 240-0078 / (647) 300-1973 info@canadiantamilcongress.ca

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.