அரசுடன் இணைய முயன்ற ராஜிதவிற்கு கெஹலியவால் ஏற்பட்டுள்ள சிக்கல்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு சுகாதார அமைச்சர் பதவியை வழங்குவதற்கு தற்போதைய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் சுகாதார அமைச்சர் பதவியை தமது கட்சி விரும்புவதாக அதிபர் தரப்பினருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ராஜிதவிற்கு ஏற்பட்ட சிக்கல்
இந்நிலைமையால் ராஜித சேனாரத்ன அரசாங்கத்துடன் இணைவது மேலும் தாமதமாகி வருவதாகவும் அவர் அரசாங்கத்துடன் இணைந்தால் அவருக்கு வேறு அமைச்சுப் பதவி வழங்குவது தொடர்பிலும் தொடர்ந்தும் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அறியமுடிகிறது.
வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அவர் அரசாங்கத்துடன் இணைவார் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
கருத்துக்களேதுமில்லை