பிறப்பு சான்றிதழில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்..! தேசிய இனம் என்பதை நீக்க நடவடிக்கை
தேசிய இனம்
பிறப்புச்சான்றிதழில் தேசிய இனம் என்பதை நீக்குவது குறித்து யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிறப்புச்சான்றிதழில் தற்போது காணப்படும் சிங்களவர், பேகர், முஸ்லீம் இந்திய வம்சாவளியினர் போன்ற பதங்கள் நீக்கப்படும் வகையிலேயே இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது என பதிவாளர் நாயகம் பிரசாத் அபேவிக்கிர தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சமூகத்தில் தற்போது காணப்படும் விவகாரங்கள் மற்றும் சர்வதேச அளவில் காணப்படும் பிரச்சினைகளைக் கருதிற் கொண்டு இந்த யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.
அகற்றுவதற்கு எதிர்ப்பு
ஆனால் தேசிய இனம் தொடர்பான சொற்பதத்தை அகற்றுவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தராதரத்துக்கு ஏற்ப பிறப்பு சான்றிதழில் மாற்றங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தராதரங்கள் அடிப்படையில் பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கு ஒருவர் தனது தாய்மொழியில் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் சிங்களம் தமிழ் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
கருத்துக்களேதுமில்லை